இஸ்ரேல் படையால் கைது செய்யப்பட்ட மலேசிய தன்னார்வலர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்: பிரதமர்
புத்ராஜெயா:
இஸ்ரேல் படையால் கைது செய்யப்பட்ட மலேசிய தன்னார்வலர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.
காசா மக்களுக்கான உதவிப் பொருட்களை கொண்டு சேர்க்கும் குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா (ஜிஎஸ்எப்) கப்பல் பயணம் அவசியமானது.
இந்த பணி நிராயுதபாணியான பொதுமக்களுக்காக இயக்கப்படும் ஒரு மனிதாபிமான முயற்சி. மேலும் இது காசா மக்களுக்கு மிகவும் தேவையான உதவிகளை வழங்கும்.
இந்நிலையில் இக்கப்பல் பயணத்தை இஸ்ரேலிய படை இடைமறித்துள்ளது.
இது குறித்து மலேசிய தன்னார்வலர்கள் குழுவிடமிருந்து எனக்கு தகவல் கிடைத்தது.
அதே வேளையில் இதுவரை 12 மலேசியர்கள் இஸ்ரேல் படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆக அனைத்து மலேசிய, அனைத்துலக தன்னார்வலர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
தடுப்புக்காவலில் உள்ள மலேசியர்களை விடுவிக்க அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்

