பள்ளியில் 4ஆம் ஆண்டு மாணவன் மரணமடைந்த விவகாரம் குறித்து போலிசார் விசாரணை தொடர்கிறது
சிரம்பான்:
பள்ளியில் 4ஆம் ஆண்டு மாணவன் மரணமடைந்த விவகாரம் குறித்து போலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
நெகிரி செம்பிலான் போலிஸ் தலைவர் அல்சாஃப்னி அஹ்மது இதனை உறுதிப்படுத்தினார்.
சிரம்பானில் உள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவன் மரணமடைந்துள்ளான்.
10 வயது மாணவனின் மரணம் குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
இந்த சம்பவத்தை நான் உறுதிப்படுத்துகிறேன்.
இருப்பினும் மேலும் விசாரணைகள் இன்னும் நடத்தப்பட்டு வருகின்றன என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதனிடையே அம் மாணவனின் மரணம் குறித்து முழுமையான, வெளிப்படையான விசாரணையை நடத்துவதை போலிசாரிடம் கல்வியமைச்சு விட்டு விடுகிறது.
கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் இதனை கூறினார்.
இந்த நேரத்தில் குடும்பத்தின் உணர்வுகளைக் கவனித்துக்கொள்வதில் அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க முடியும்.
முழுமையான போலிஸ் விசாரணைக்காகக் காத்திருக்கும்போது எந்தவிதமான உண்மையற்ற ஊகங்களையும் தவிர்க்க முடியும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்

