மலேசிய வரலாற்றில் எம்ஏசிசி தற்போது மிகவும் துணிச்சலாக செயல்படுகிறது: பிரதமர்
கோலாலம்பூர்:
மலேசிய வரலாற்றில் எம்ஏசிசி தற்போது தான் மிகவும் துணிச்சலாக செயல்படுகிறது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்வாறு பாராட்டினார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை (எம்ஏசிசி) இவ்வேளையில் பாராட்டுகிறேன்.
குறிப்பாக செல்வாக்கு மிக்க நபர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எம்ஏசிசி எடுத்துள்ளது.
இது வரலாற்றில் மிகவும் துணிச்சலான முடிவாகும்.
எங்கள் அரசியல் உறுதிப்பாடு, எம்ஏசிசியின் வலிமையுடன், சட்டத்தை மீறியதாகக் கண்டறியப்பட்ட எவருக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பதில் இந்த ஆணையம் அதன் துணிச்சலால் நாட்டையே உலுக்கியுள்ளது என்று நான் காண்கிறேன்.
ஊழல் குற்றவாளிகளுக்கு எதிராக அவர்களின் நிலை என்னவாக இருந்தாலும், விரிவான துணிச்சலான நடவடிக்கை எடுத்த எம்ஏசிசிக்கு எனது பாராட்டு.
எம்ஏசிசியின் வரலாற்றில் இதற்கு முன்பு ஒருபோதும் மிகவும் செல்வாக்கு மிக்க பிரமுகர்களுக்கு எதிராக இவ்வளவு துணிச்சலாக செயல்பட்டதில்லை என்று நான் கருதுகிறேன்.
கடந்த காலத்தில் ஒரு அமைச்சர் அல்லது ஒரு மந்திரி புசார் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கும்.
ஆனால் இப்போது விரிவான, முழுமையான, துணிச்சலான, ஆபத்து நிறைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
1957 முதல் வரலாற்றில் நான் அதைப் பற்றி ஒருபோதும் படித்ததில்லை.
எம்ஏசிசியின் 58ஆவது ஆண்டு விழா, 'மலேசியாவை சுத்தமாக வைத்திருப்போம்' பிரச்சார தொடக்க விழாவில் பிரதமர் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்

