இஸ்மாயில் சப்ரி மீது குற்றஞ்சாட்டலாமா வேண்டாமா என்பது சட்டத் துறை தலைவரை பொறுத்தது: அஸாம் பாக்கி
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி மீது குற்றஞ்சாட்டலாமா வேண்டாமா என்பது சட்டத் துறை தலைவரை பொறுத்தது.
எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி இதனை கூறினார்.
அவர் மீதான ஊழல், பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடருமா இல்லையா என்பது குறித்து சட்டத் துறை தலைவர் முடிவுக்காக எம்ஏசிசி காத்திருக்கிறது.
குற்றச்சாட்டுக்காக வழக்கைத் தொடர விரும்புகிறாரா இல்லையா என்பதை சட்டத் துறை தலைவர் முடிவு செய்வதற்காக நான் காத்திருக்கிறேன்.
அவ்வளவுதான். அது அவருடைய விருப்பம்.
ஆனால் சொத்து மீட்புப் பணியைப் பொறுத்தவரை, நாங்கள் அதைச் செய்துவிட்டோம்.
அனைத்து சொத்துக்களும் மீட்கப்பட்டுள்ளன. அது இப்போது அரசாங்கத்திற்கு சொந்தமானது.
எம்ஏசிசியின் 58ஆவது ஆண்டு விழா, மலேசியாவை சுத்தமாக வைத்திருப்போம் பிரச்சார தொடக்க விழாவில் டான்ஸ்ரீ அசாம் பாக்கி செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்

