images

E ARRIVAL CARD - அக்டோபர் 1 முதல் இந்தியாவில் அமல்: OCI card வைத்திருப்பவர்களுக்கு விலக்கு

image

E ARRIVAL CARD - அக்டோபர் 1 முதல் இந்தியாவில் அமல்: OCI card வைத்திருப்பவர்களுக்கு விலக்கு

புது டெல்லி: 

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் பயண வருகை அட்டைகளை அக்டோபர் 1 முதல் இணையவழியிலேயே பூர்த்தி செய்து விடலாம் என்று இந்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது,

இதனால் விமான நிலைய குடியேற்ற மையத்தில் பயணிகள் காத்திருக்கும் நேரம் குறையும்.

மின்னணு வருகை அட்டையில் பாஸ்போர்ட் எண், தேசியம், வருகையின் நோக்கம், உள்ளூர் முகவரி, தொடர்புத் தகவல் போன்ற அடிப்படை விவரங்களை நிரப்ப வேண்டும். இதற்காக எந்த ஆவண பதிவேற்றங்களும் தேவையில்லை.

இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாட்டு இந்திய குடிமகன் (OCI) அட்டை வைத்திருப்பவர்கள் படிவத்தை நிரப்புவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் லக்னோ, திருவனந்தபுரம், திருச்சி, கோழிக்கோடு, அமிர்தசரஸ் ஆகிய ஐந்து விமான நிலையங்களில் ஃபாஸ்ட் டிராக் குடியேற்ற திட்டம் தொடங்கப்பட்டது.

இந்திய குடிமக்கள், OCI வைத்திருப்பவர்களுக்கு இந்த திட்டம் முதலில் 2024 இல் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, கொச்சி, அஹ்மதாபாத் வரை நீட்டிக்கப்பட்டது.

மொத்தம் 13 விமான நிலையங்களில் இப்போது இந்த வசதியை வழங்கப்படுகிறது. இதனால் பயணிகள் இப்போது நீண்ட வரிசைகள் நிற்பது தடுக்கப்பட்டு, 30 வினாடிகளில் குடியேற்ற அனுமதியைப் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபாஸ்ட் டிராக் குடியேற்ற திட்ட (FTI-TTP) போர்ட்டலில் சுமார் 3 லட்சம் பயணிகள் பதிவு செய்துள்ளனர், அதில் 2.65 லட்சம் பேர் பயணத்தின் போது இதைப் பயன்படுத்தியுள்ளனர் என்று  அரசு தெரிவித்துள்ளது.

- ஆர்யன்

பகிர்
+ - reset