கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: சாமியார் சைதன்யானந்தா கைது
புது டெல்லி:
மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை அளித்ததாக தேடப்பட்டு வந்த டெல்லி தனியார் கல்லூரியின் இயக்குநர் சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி ஆக்ராவில் கைது செய்யப்பட்டார். இவர் மீது 17 மாணவிகள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளனர்.
2016-ம் ஆண்டும் இதேபோல் மாணவிகள் அவர் மீது அளித்த பாலியல் புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்து அதே நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.
இதையடுத்து அவரை போலீஸார் தற்போது 17 மாணவிகள் அளித்த பாலியல் புகாரின் பேரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நாட்டின் தலைநகரில் மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி தொடர்ச்சியாக ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

