images

பிபா அபராதம்; ஆவணங்கள் சமர்ப்பிப்பதில் தொழில்நுட்ப பிழை ஏற்பட்டது: எப்ஏஎம்

image

பிபா அபராதம்; ஆவணங்கள் சமர்ப்பிப்பதில் தொழில்நுட்ப பிழை ஏற்பட்டது: எப்ஏஎம்

பெட்டாலிங்ஜெயா:

ஃபிஃபா அபராதம் விவகாரம் தொடர்பில் ஆவணங்களை சமர்ப்பிப்பதில் தொழில்நுட்ப பிழை ஏற்பட்டது என்று எப்ஏஎம் கூறியது.

கடந்த வெள்ளிக்கிழமை அனைத்துலக கால்பந்து சம்மேளம், மலேசிய கால்பந்து சங்கத்திற்கு எதிராக  நடவடிக்கையை எடுத்தது.

இதைத் தொடர்ந்து எப்ஏஎம் அதன் நிர்வாக ஊழியர்களால் ஏழு மலேசிய ரத்த உறவுக் கொண்ட வீரர்களுக்கான ஆவணங்களைச் சமர்பித்தது.

இந்த சமர்ப்பிக்கும் செயல்பாட்டில் தொழில்நுட்பப் பிழை ஏற்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தை எப்ஏஎம் தீவிரமாகக் கருதுவதாக அதன் பொதுச் செயலாளர் நூர் அஸ்மான் ரஹ்மான் கூறினார்.

தற்போதுள்ள சட்ட நடைமுறை மற்றும் தீர்வுகளின்படி மேல்முறையீடு செய்வதற்கு முன்பு, பிபாவின் முழு தீர்ப்புக்காக எப்ஏஎம் காத்திருக்கிறது.

மேலும் சம்பந்தப்பட்ட வீரர்கள் சட்டப்பூர்வ மலேசிய குடிமக்கள் என்பதை அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset