images

லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி

image

லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் அதிர்ச்சி தோல்வி

மாட்ரிட்:

லா லீகா கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

மெட்ரோபோலிடன் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியை சந்தித்து விளையாடினர்.

இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் நடைபெற்றது.

இதில் ரியல்மாட்ரிட் அணியினர் 2-5 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியிடம் தோல்வி கண்டனர்.

அட்லாட்டிகோ மாட்ரிட் அணிக்காக ஜூலியன் அல்வாரேஸ் இரு கோல்களை அடித்தார்.

மற்ற கோல்களை அந்தோனியோ கிரிஸ்மேன், சோர்லோட், நோர்மண்ட் ஆகியோர் அடித்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset