இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி அபாரம்
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி அபாரம்
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
எதிஹாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் பெர்ன்லி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 5-1 என்ற கோல் கணக்கில் பெர்ன்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் சிட்டி அணிக்காக எர்லிங் ஹாலண்ட் இரு கோல்களை அடித்தார்.
மற்ற கோல்களை நூனஸ் எதிரணி ஆட்டக்காரர் ஸ்டீவ் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 1-3 என்ற கோல் கணக்கில் பிரின்போர்ட் அணியிடம் தோல்வி கண்டனர்.
செல்சி அணியினர் 1-3 என்ற கோல் கணக்கில் பிரிக்டன் அணியிடம் தோல்வி கண்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

