மலேசிய ரத்த உறவுகளைக் கொண்ட வீரர்களை விளையாட தகுதியுடையவர்கள் என பிபா அங்கீகரித்துள்ளது: எம்ஏஎம்
மலேசிய ரத்த உறவுகளைக் கொண்ட வீரர்களை விளையாட தகுதியுடையவர்கள் என பிபா அங்கீகரித்துள்ளது: எம்ஏஎம்
பெட்டாலிங்ஜெயா:
மலேசிய ரத்த உறவுகளைக் கொண்ட வீரர்களை விளையாட தகுதியுடையவர்கள் என பிபா அங்கீகரித்துள்ளது.
எம்ஏஎம் எனப்படும் மலேசிய கால்பந்து சங்கத்தின் இடைக்காலத் தலைவர் டத்தோ முகமட் யூசோப் மஹாடி இதனை கூறினார்.
எம்ஏஎம் மலேசிய ரத்த உறவுக் கொண்ட வீரர் வழக்கு தொடர்பாக அனைத்துலக கால்பந்து சங்க கூட்டமைப்பிடமிருந்து அதிகாரப்பூர்வ முடிவைப் பெற்றுள்ளதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
சம்பந்தப்பட்ட வீரர்களும் எம்ஏஎம்-மும் இந்த செயல்முறை முழுவதும் நல்லெண்ணத்துடனும் முழு வெளிப்படைத்தன்மையுடனும் செயல்பட்டுள்ளது.
எம்ஏஎம் அனைத்து ஆவணங்கள், தொடர்புடைய நடைமுறைகளையும் வெளிப்படையாக நிர்வகித்து வருகிறது.
உண்மையில், பிபா முன்பு வீரர்களின் தகுதிகளை மதிப்பாய்வு செய்து, அவர்கள் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தகுதியுடையவர்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
ஆக இந்த நடவடிக்கை முடிவு தொடர்பாக, எம்ஏஎம் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும்.
மேலும் வீரர்கள், மலேசிய அணியின் நலன்கள் எப்போதும் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய கிடைக்கக்கூடிய அனைத்து சட்ட வழிகளையும் நடைமுறைகளையும் பயன்படுத்தும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

