போலி ஆவணங்களை சமர்ப்பித்ததற்காக எப்ஏஎம்க்கு அபராதம்: 7 வீரர்களை இடைநீக்கம் செய்ததது FIFA
போலி ஆவணங்களை சமர்ப்பித்ததற்காக எப்ஏஎம்க்கு அபராதம்: 7 வீரர்களை இடைநீக்கம் செய்ததது FIFA
கோலாலம்பூர்:
போலி ஆவணங்களை சமர்ப்பித்ததற்காக எப்ஏஎம்க்கு அபராதம் விதித்ததுடன் 7 மலேசிய இரத்த உறவு கொண்ட வீரர்களை பிபா இடைநீக்கம் செய்ததது.
பிபாவில் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 22ஐ மீறியதாக கண்டறியப்பட்ட பின்னர் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
மலேசிய கால்பந்து சங்கம் 7 தேசிய வீரர்களுக்காக போலி ஆவணங்களை மோசடி செய்ததாக குற்றம் சாட்டியுள்ளது.
அதிகாரப்பூர்வ போட்டிகளில் களமிறங்குவதற்கு வீரர்களின் தகுதிகளின் செல்லுபடியாகும் விஷயத்தில் எம்ஏஎம் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகக் கண்டறியப்பட்டதாக பிபா தனது அறிக்கையில் அறிவித்துள்ளது.
கேப்ரியல் பெலிப் அரோச்சா, ஃபாசுண்டோ தோமஸ் கார்சஸ், ரோட்ரிகோ ஜூலியன் ஹோல்கடோ, இமானோல் ஜேவியர் மச்சுகா, ஜோவா விட்டோர் பிராண்டாவோ ஃபிகுயிரேடோ, ஜான் இராசபால் இரார்குய், ஹெக்டர் அலெஜான்ட்ரோ ஹெவெல் செரானோ ஆகியோரே அந்த ஏழு வீரர்கள் ஆவர்.
கடந்த ஜூன் 10அம் தேதி வியட்நாமுக்கு எதிரான 2027 ஆசிய கோப்பை தகுதிப் போட்டியின் போது இவர்கள் அனைவரும் விளையாடியிருந்தனர்.
பின்னர் சில வீரர்களின் தகுதி நிலை குறித்து பிபாவிடம் அதிகாரப்பூர்வ புகார் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

