சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
ரியாத்:
சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.
கிங் அப்துல்லா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் இத்திஹாத் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் அல் இத்திஹாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் நசர் அணியின் வெற்றி கோல்களை கிறிஸ்டியானோ ரொனால்டோ, சாடியோ மனே ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் அல் அஹ்லி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் அல் அசாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் எத்திக் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் டமாக் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

