இல்லை, இல்லை, இல்லை: கைரி
இல்லை, இல்லை, இல்லை: கைரி
கோலாலம்பூர்:
மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவர் பதவிக்கான தற்போதைய காலியிடத்தில் கைரி ஜமாலுடின் பெயர் மீண்டும் ஒருமுறை அந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் முன்னாள் அச்சங்கத்தின் துணைத் தலைவரான கைரி,
நாட்டின் கால்பந்து நிர்வாகக் குழுவிற்குத் திரும்புவதில் தனக்கு விருப்பமில்லை என்று கூறியபோது தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும் ஜொகூரில் தனது பொறுப்புகளில் தான் இப்போது கவனம் செலுத்துவதாக அவர் விளக்கினார்.
அங்கு அவர் தற்போது ஜொகூர் இளைஞர் ஆலோசகராகவும், ஜேடிதி கிளப்பின் இயக்குநர்கள் குழுவில் பணியாற்றி வருகிறார்.
ஆக மலேசிய கால்பந்து சங்கத்தின் தலைவர் பொறுப்பை ஏற்க எனக்கு ஆர்வம் இல்லை.
இல்லை, இல்லை, இல்லை.
நான் கால்பந்தில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட ஒருவர் மட்டுமே என்று கைரி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

