6 தொகுதிகள் அளித்தால் பிகாரில் இந்தியா கூட்டணியுடன் சேர தயார்: ஒவைசி
புது தில்லி:
பிகார் பேரவைத் தேர்தலில் 6 தொகுதிகள் அளித்தால் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணியில் சேர தயாராக உள்ளதாக அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.
அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், 243 தொகுதிகள் உள்ள பிகாரில் 6 தொகுதிகளை ஒதுக்கினால், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இணையத் தயாராக இருப்பதாக கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தேஜஸ்வி யாதவுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
நாங்கள் கோரிய தொகுதியை ஒதுக்கினால் அக் கூட்டணியில் இணைவோம். இல்லையென்றால் தனித்துப் போட்டியிடுவோம். இதன்மூலம் பாஜகவுக்கு நாங்கள் மறைமுகமாக உதவுவதாக யாரும் குற்றஞ்சாட்ட முடியாது என்றார்.
முந்தைய பிகார் பேரவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 5 இடங்களில் ஒவைசி கட்சி வென்றது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

