கோடிக்கணக்கானோரின் வாக்குரிமையைப் பறிக்க சதி
புது டெல்லி:
இந்தியாவில் கோடிக்கணக்கானோரின் வாக்குரிமையைப் பறிக்க சதி நடக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புகார் கூறினார்.
நிகழாண்டு பேரவைத் தேர்தல் நடைபெறும் பிகாரின் பாட்னாவில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கார்கே ஆற்றிய உரை:
சர்வதேச அளவில் இந்தியா தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளுக்கு பிரதமர் மோடிதான் காரணம்.
நியாயமான தேர்தல்களே ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால், தேர்தல் ஆணையத்தின் நேர்மை மீது வெளிப்படைத் தன்மை மீதே தீவிர கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு பதிலளிக்காமல், கேள்வி எழுப்பிய ராகுலிடம் தேசிய ஆணையம் பிரமாண பத்திரம் கேட்கிறது.
பிகாரைப் போல் நாடு முழுவதும் கோடிக்கணக்கானோரின் வாக்குரிமையைப் பறிக்க சதி நடக்கிறது என்றார்.
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக, காங்கிரஸ் காரியக் கமிட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

