images

இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: அர்செனல், மென்செஸ்டர் சிட்டி வெற்றி

image

இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: அர்செனல், மென்செஸ்டர் சிட்டி வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியில் அர்செனல், மென்செஸ்டர் சிட்டி அணிகள் வெற்றி பெற்றன.

வேலி பார்க் அரங்கில் நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டத்தில் அர்செனல் அணியினர் போர்ட் வேலி அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் போர்ட் வேலி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்செனல் அணியின் வெற்றி கோல்களை  எபரீச்சி ஈஸ், லியாண்ட்ரோ ட்ராசார்ட் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் ஹாட்டர்ஸ்பீல்டு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்ற ஆட்டங்களில் டோட்டன்ஹாம், நியூகாஸ்டல் யுனைடெட் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset