லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
மாட்ரிட்:
லா லீகா கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.
கியூதாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் லெவான்தே அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் லெவான்தே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியல்மாட்ரிட் அணிக்காக கிளையன் எம்பாப்பே இரு கோல்களை அடித்தார்.
மற்ற கோல்களை வினிசியஸ் ஜூனியர், பிரான்கோ மஸ்தாவ்னோ ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் வெலன்சியா அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் ஸ்பான்யோல் அணியுடன் சமநிலை கண்டனர்.
வில்லாரியல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் செவிலா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

