கழிவறை என விமானி அறைக்குள் நுழைய முயன்ற பயணி
மும்பை:
ஏர் இந்தியா விமானத்தில் கழிவறை என நினைத்து விமானி அறைக்குள் பயணி நுழைய முயன்ற சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வாரணாசிக்கு சென்றுகொண்டிருந்த விமானத்தில் கழிவறைக்கு சென்ற பயணி ஒருவர் திடீரென விமானி அறைக்குள் நுழைய முயன்றார்.
விமானம் தரையிறங்கியதும் அதிகாரிகளிடம் அந்தப் பயணி ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வாரணாசி காவல் துறையினர் கூறுகையில், அந்தப் பயணியுடன் பயணித்த 8 பேரை சிஐஎஸ்எஃப் கைது செய்து காவல் துறையிடம் ஒப்படைத்தது.
அவர்கள் 9 பேரும் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள். ஆன்மிகப் பயணம் மேற்கொண்டனர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

