சிறந்த கால்பந்து வீரருக்கான தங்கப் பந்து விருதை டெம்பேலே வென்றார்
சிறந்த கால்பந்து வீரருக்கான தங்கப் பந்து விருதை டெம்பேலே வென்றார்
பாரிஸ்:
சிறந்த கால்பந்து வீரருக்கான தங்கப் பந்து விருதை ஓஸ்மனே டெம்பேலே வென்று சாதித்துள்ளார்.
பாலன் டி ஓர் எனும் தங்கப் பந்து விருது பிரான்ஸ் கால்பந்து பத்திரிகையால் நடத்தப்படுகிறது.
அனைத்துலக பத்திரிகையாளர்களால் வாக்களிக்கப்பட்டபடி, தனிப்பட்ட செயல்திறன், குழு சாதனைகள், விளையாட்டுத் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் சிறந்த வீரருக்கு வழங்கப்படுகிறது.
அவ்வகையில் இம்முறை அவ்விருதை பிஎஸ்ஜி வீரர் ஓஸ்மனே டெம்பலே வென்றுள்ளார்.
சாம்பியன்ஸ் லீக் வெற்றியுடன் முடிவடைந்த ஒரு அற்புதமான சீசனுக்குப் பிறகு, பார்சிலோனாவின் இளம் நட்சத்திரம் லாமின் யமலை வீழ்த்தி அவ்விருதை வென்று டெம்பேலே வரலாறு படைத்தார்.
28 வயதான அவர் பிஎஸ்ஜி அணிக்காக கடந்த சீசனில் அனைத்து போட்டிகளிலும் 53 போட்டிகளில் 35 கோல்களை அடித்தார்,
இது பிரான்ஸ் லீக் 1, பிரான்ஸ் கிண்ணம், சாம்பியன்ஸ் லீக்கை மும்மடங்காக வெல்ல உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

