தன்னைக் கடித்த பாம்பின் தலையைத் திருப்பி கடித்தவர் தீவிர சிகிச்சையில் அனுமதி
புது டெல்லி:
மது போதையில் தன்னை கடித்த பாம்பின் தலையைத் திருப்பி கடித்தவர் தீவிர மருத்துவ சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் ஆந்திர மாநிலத்தின் திருப்பதியில் உள்ள சிய்யாவரம் கிராமத்தில் நடைபெற்றுள்ளது.
கோயில் திருவிழா நடைபெற்றபோது அந்த கிராமத்தைச் சேர்ந்த 48 வயதான வெங்கடேஷ் மது அருந்திவிட்டு சென்றபோது நாகப்பாம்பு அவரின் காலை கடித்து விட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ், பாம்பை பிடித்து திருப்பி அதன் தலையில் கடித்துள்ளார்.
அதில் இறந்த பாம்பின் உடலுடன் வீட்டுக்கு சென்ற தூங்கி விட்டார். வெங்கடேஷை அவரது குடும்பத்தினர்.
மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

