சவுதி - பாகிஸ்தான் ஒப்பந்தத்தை ஆய்வு செய்கிறோம்: இந்தியா
புது டெல்லி:
பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையே மேற்கொள்ளபட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீபும், சவுதி பிரதமர் முகமது பின் சல்மானும் ரியாத்தில் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டனர்.
அதில், பாகிஸ்தான் சவுதி அரேபியா என எந்த நாட்டின் மீது ராணுவ தாக்குதல் நடத்தப்பட்டாலும், அது மற்றொரு நாட்டின் மீதும் மேற்கொள்ளப்பட்டதாகவே கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவுக்கு எதிராக சவுதி அரேபியாவை தங்களுடன் கூட்டு சேர்க்கும் நோக்கில் பாகிஸ்தான் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.
அதுவும் பாகிஸ்தானிடம் அணு ஆயுதம் உள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து நடைபெறும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் தொடர்பாக தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில்,
தேசப் பாதுகாப்பு விஷயத்தில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. பாகிஸ்தான்- சவுதி அரேபியா பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஆய்வு செய்து வருகிறோாம்.
இரு நாடுகளும் மிக நீண்டகாலப் பேச்சு நடத்தி இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

