சிஎம் சார் மனசை தொட்டு சொல்லுங்க; வெளிநாட்டு முதலீடா? இல்லை வெளிநாட்டில் முதலீடா?: விஜய்
சிஎம் சார் மனசை தொட்டு சொல்லுங்க; வெளிநாட்டு முதலீடா? இல்லை வெளிநாட்டில் முதலீடா?: விஜய்
நாகை:
தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணமாக இன்று நாகை மாவட்டத்திற்கு சென்றார்.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள், மக்கள் சாலையெங்கும் திரண்டு அவரை வரவேற்றனர்.
நாகை மாவட்டம் புத்தூர் ரவுண்டானா அண்ணா சிலை சந்திப்பில் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய விஜய் கூறியதாவது:
மீனவர்களின் கஷ்டத்தை பார்த்து கடிதம் எழுதிவிட்டு அமைதியாக இருக்க நாம் கபட நாடக தி.மு.க. கிடையாது.
இந்திய மீனவர்கள் தமிழக மீனவர்களை என பிரித்து பார்க்க நாம் பாசிச பா.ஜ.க.வும் கிடையாது.
பாரம்பரிய கடல்சார்ந்த ஊரில் அரசு மெரைன் கல்லூரி கொண்டு வந்திருக்கலாம், மீன் தொடர்பான ஆலை அமைத்திருக்கலாம்.
சிஎம் சார் மனசை தொட்டு சொல்லுங்க.. வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா..
ஒவ்வொரு முறை வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுவரும் போதெல்லாம் சிரித்துக்கொண்டே பேசுகிறார் சிஎம். இது பல கேள்விகளை எழுப்புகிறது.
இதை தவிர்த்து நாகூரில் மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் மருத்துவரே இல்லையாம்.
மீன்வளம் மிக்க நாகையில் மீன் தொழிற்சாலை அமைத்தார்களா அல்லது வேலைவாய்ப்பு அளிக்க தொழில் வளத்தையாவது பெருக்கினார்களா?
நாகை மக்களின் குடிநீர் பிரச்சனைகளை தீர்க்க காவிரி குடிநீர் திட்டம் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
நாகை பேருந்து நிலையத்தில் சுகாதாரம் இல்லை, ரயில் நிலையத்தில் போதிய வசதிகள் இல்லை.
இப்படி திமுக ஆட்சியில் இப்பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
இதை கேள்வி கேட்டால் நாம் கெட்டவர் ஆகிவிடுவோம்.
நான் களத்திற்கு வருவது ஒன்றும் புதிதல்ல. எப்போதோ வந்துவிட்டேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

