இந்தர்மியாமியில் கிடைக்கும் மிகப்பெரிய வருவாயே மெஸ்ஸி பிஎஸ்ஜியை விட்டு வெளியேறியதற்கான காரணம்
இந்தர்மியாமியில் கிடைக்கும் மிகப்பெரிய வருவாயே மெஸ்ஸி பிஎஸ்ஜியை விட்டு வெளியேறியதற்கான காரணம்
நியூயார்க்:
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி பிஎஸ்ஜி அணியை விட்டு வெளியேறி 2023இல் இந்தர்மியாமியில் இணைந்தார்.
இந்நிலையில் அவர் இந்தர்மியாமிக்காக விளையாடி சம்பாதித்த மகத்தான தொகை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
கிளப், நாடு இரண்டிற்கும் எட்டு பலோன் டி ஓர் விருதுகளையும் 46 கிண்ணங்களை வென்ற பிறகு, மெஸ்ஸியின் சேவைகளைப் பெறுவது மலிவானது அல்ல என்பதில் ஆச்சரியமில்லை.
உலகக் கிண்ணத்தை வென்றவர் சிறுவயது கிளப்பான பார்சிலோனாவுடனான தனது முதல் ஒப்பந்தத்தில் மாதத்திற்கு சுமார் 600 யூரோமட்டுமே சம்பாதித்ததாகக் கூறப்படும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், டேவிட் பெக்காமின் மேஜர் லீக் கால்பந்து அணியான இந்தர்மியாமியில் சேர அவர் எதிர்பாராத விதமாக நடவடிக்கை எடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க அணியுடன் மெஸ்ஸி சம்பாதித்த பணம் குறித்த சரியான விவரங்கள் வெளியாகியுள்ளன.
இந்தர்மியாமியுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 38 வயதான அவர் போனஸ், ஸ்பான்சர்ஷிப்களைத் தவிர்த்து, வாராந்திர அடிப்படை சம்பளமாக சுமார் 302,772 யூரோவை பெறுவதாகக் கூறப்படுகிறது.
மேலும் இந்தர் மியாமியுடனான ஒப்பந்தத்தின் கீழ் சுமார் 34.3 வாரங்களுக்கு மொத்தம் 113 மில்லியன் யூரோ சம்பளம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

