images

இந்த வாரம் அமோரிம் பணிநீக்கம் செய்யப்படலாம்: ஷீரர்

image

இந்த வாரம் அமோரிம் பணிநீக்கம் செய்யப்படலாம்: ஷீரர்

லண்டன்:

மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி அமோரிம் இந்த வாரம் பணிநீக்கம் செய்யப்படலாம்.

பிரபல் பிரிமியர் லீக் ஜாம்பவான் ஆலன் ஷீரர் இதனை கூறியுள்ளார்.

தனது கால்பந்து தத்துவத்தை வலியுறுத்தியதற்காக இந்த வார இறுதியில் பதவி நீக்கம் செய்யப்படலாம்.

வரும் புதன்கிழமை இரவு ஓல்ட் டிராபோர்டில் செல்சியுடன் மென்செஸ்டர் யுனைடெட் மோதுகிறது.

முடிவு மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிராக சென்றால் அவர் வெளியேற்ற வாய்ப்பு உள்ளது.

 மேலும் கடந்த வார இறுதியில் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்தபோது, ​​தங்களுக்கும் மென்செஸ்டர் சிட்டிக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளியை ஏற்படுத்தியது.

இதனால் அமோரிம் அதே தவறை மீண்டும் செய்ய முடியாது.

ஆக இந்த வார இறுதியில் அவர்களால் மீண்டும் அப்படி தோற்க முடியாது என்று நினைக்கிறேன். 

அப்படித் தோற்பார்கள் என்றால், மேலாளருக்கு அடுத்து என்ன நடக்கும் என்று நாம் கவலைப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset