images

சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி

image

சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி

லண்டன்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர் வெற்றி பெற்றனர்.

எஸ்டி ஜேம்ஸ் பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் நியூகாஸ்டல் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல்  அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பார்சிலோனா அணியின் இரு வெற்றி கோல்களை மார்கஸ் ராஸ்போர்ட் அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் ஸ்போர்டிங் சிபி அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் கைராட் அல்மாடி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன்நாகராஜன்

பகிர்
+ - reset