images

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

image

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

சென்னை: 

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார். 

உடல்நிலை மோசமாகி ஐசியூவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

46 வயதான இவருக்கு அண்மையில் திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ரோபோ சங்கர் மறைவு தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset