ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் வெற்றி
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் வெற்றி
லண்டன்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணியினர் வெற்றி பெற்றனர்.
அன்பீல்டு அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
லிவர்பூல் அணியின் வெற்றி கோல்களை அண்ட்ரூ ரோபட்சன், முகமத் சாலா, வெர்ஜில் வான் டிஜ்க் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் அட்லாண்டா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பாயர்ன் முனிச் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் செல்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்தர்மிலான் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் அஜெக்ஸ் ஆம்ஸ்டர்டம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

