images

தசரா விழாவை பானு முஷ்தாக் தொடங்க பாஜக எதிர்ப்பு மனு: நீதிமன்றம் தள்ளுபடி

image

தசரா விழாவை பானு முஷ்தாக் தொடங்க பாஜக எதிர்ப்பு மனு: நீதிமன்றம் தள்ளுபடி

பெங்களூரு:

மைசூரில் நடைபெறும் தசரா திருவிழாவைத் தொடங்கி வைக்க சர்வதேச புக்கர் பரிசு பெற்ற கன்னட எழுத்தாளர் பானு முஷ்தாக்குக்கு கர்நாடக மாநில அரசு அழைத்ததற்கு எதிராக பாஜக முன்னாள் எம்.பி. பிரதாப் சிம்ஹா தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

எழுத்தாளர் பானு முஷ்தாக்கை அழைத்ததன் மூலம் காலம்காலமாக பின்பற்றி வந்த பாரம்பரியத்தை மாநில அரசு அவமதித்துள்ளது. தசரா திருவிழாவைத் தொடங்கிவைக்க, மாநில அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது.

எனவே, பானு முஷ்தாக்குக்கு விடுத்துள்ள அழைப்பை மாநில அரசு திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என்று பிரதாப் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், அரசு நிகழ்ச்சியை மாற்று மதத்தை சேர்ந்தவர் தொடங்கிவைப்பதாக கூறுவது ஏற்க முடியவில்லை என்று உத்தரவிட்டு தள்ளுபடி செய்தது.

- ஆர்யன்

பகிர்
+ - reset