பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
புது டெல்லி:
IRCTC இணையதளத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்த பயணிகளுக்கு மட்டுமே முதல் 15 நிமிடங்கள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும் என ரயில்வே அறிவித்துள்ளது.
தட்கல் டிக்கெட்டு முன் பதிவில் முறைகேடுகளைத் தடுக்க கடந்த ஜூலையில் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டது.
இதிலும் முறைகேடுகள் நடப்பதால், IRCTC இணையதளம், செயலியில் ஆதார் எண் சரிசார்ப்பு மூலம் டிக்கெட் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது.
ஆதார் எண்ணை பதிவு செய்த பயணிகள் மட்டுமே முதல் 15 நிமிடங்கள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். இதர பயணிகள் 15 நிமிடங்களுக்கு பிறகு டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவர் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது,
அக்டோபர் 1 முதல் புதிய நடைமுறை அமல் செய்யப்பட உள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

