images

Emmy விருது வென்ற ஆக இளைய நடிகர் - 'Adolescence' தொடர் புகழ் ஓவன் கூப்பர்

image

Emmy விருது வென்ற ஆக இளைய நடிகர் - 'Adolescence' தொடர் புகழ் ஓவன் கூப்பர்

ஹாலிவுட்:

Netflix தளத்தின் பிரபல 'Adolescence' தொடரில் நடித்த 15 வயது ஓவன் கூப்பர் (Owen Cooper) Emmy விருதினை வென்ற ஆக இளைய நடிகர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.

இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட 'Adolescence' தொடரில் 13 வயது இளையர் மீது சகப் பள்ளி மாணவியைக் குத்திக் கொலை செய்ததுபோல சித்திரிக்கப்பட்டிருந்தது.

தொடரின் முதன்மை கதாபாத்திரமான ஜேமி மில்லராகக் (Jamie Miller) கூப்பர் நடித்தார்.

"3 ஆண்டுக்கு முன்பு நடிப்புப் பயிற்சிக்குச் செல்லத் தொடங்கினேன். பிரிட்டனைச் சேர்ந்த நான் அமெரிக்காவுக்குச் செல்வேன் எனச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இப்போது விருதுடன் நிற்பதை நம்ப முடியவில்லை," என்றார் அவர்.

'Adolescence' தொடருக்குச் சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகை ஆகிய பிரிவுகளிலும் Emmy விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: AFP

பகிர்
+ - reset