விஜய் வருகையால் அதிர்ந்த திருச்சி: மரக்கடை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
விஜய் வருகையால் அதிர்ந்த திருச்சி: மரக்கடை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
திருச்சி -
தவெக தலைவர் விஜய் வருகையால் திருச்சி மாவட்டமே அதிர்ந்துள்ளது.
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணத்தை முன்னிட்டு அதிகாலை முதலே திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி போக்குவரத்து நெரிசலால் திணறி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதன் முறையாக இன்று மக்கள் சந்திப்பு சுற்றுப் பயணத்தை மேற்கொள்கிறார்.
திருச்சியில் இன்று காலை தொடங்க உள்ள சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்வதற்காக திருச்சி மட்டுமல்லாமல் பல்வேறு ஊர்களில் இருந்தும் அவரது ரசிகர்கள் அதிகாலை முதலே குவிந்துள்ளனர்.
விஜய் தனி விமானம் மூலம் திருச்சி வந்தார்.
அவரை வரவேற்க விமான நிலையத்திலும் ரசிகர்கள் அதிகளவில் கூடினர்.
அதே வேளையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து விஜய் பரப்புரை நடக்கும் இடத்திற்கு செல்லும் பல மணி நேரம் எடுத்துள்ளது.
குறிப்பாக அவர் இன்னும் பிரச்சார பேருந்தில் திருச்சி மரக்கட்டை எனும் இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்.
கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் விஜய் செல்லும் பேருந்தை சூழ்ந்துள்ளனர்.
குறிப்பாக கட்டுக்கடங்காத கூட்டத்தால் திருச்சியே அதிர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

