யமால் கிட்டத்தட்ட பாயர்ன் முனிச் அணிக்கு சொந்தமாகி விட்டார்
யமால் கிட்டத்தட்ட பாயர்ன் முனிச் அணிக்கு சொந்தமாகி விட்டார்
பார்சிலோனா:
இளம் ஆட்டக்காரர் யமால் கிட்டத்தட்ட பாயர்ன் முனிச் அணிக்கு சொந்தமாகி விட்டார்.
பார்சிலோனா நட்சத்திரம் லாமின் யமால் 14 வயதாக இருந்தபோது மற்றொரு ஐரோப்பிய கால்பந்து ஜாம்பவான் அணியுடன் நெருக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் பிரபல முகவர் ஜார்ஜ் மென்டிஸ் அந்த நடவடிக்கையைத் தடுத்தார்.
கடந்த சீசனில் 18 வயதை எட்டிய போதிலும், பார்சிலோனாவின் முதல் அணிக்காக யமல் 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி 27 கோல்களை அடித்துள்ளார்.
யமால் பார்சிலோனா கிளப்புடன் இரண்டு லா லிகா பட்டங்களை வென்றுள்ளார்.
மேலும் 2024 ஐரோப்பிய சாம்பியன் கிண்ணம் வென்ற பார்சிலோனா அணியின் முக்கிய வீரராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் ஜெர்மன் செய்தித்தாள் பில்டின் கூற்றுப்படி,
பாயர்ன்முனிச் ஒருமுறை யமல் விளையாடும் காட்சிகளை கிளப் நிர்வாகத்திடம் வழங்கிய பின்னர், அவரை ஒப்பந்தம் செய்ய முயன்றது.
இப்போது அம்முயற்சிகள் வெற்றி கண்டுள்ளதாகவுல் விரைவில் அவர் பாயர்ன்முனிச் அணியில் இணைவார் என்றும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

