உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: இங்கிலாந்து அபாரம்
உலகக் கிண்ண தகுதி சுற்று ஆட்டம்: இங்கிலாந்து அபாரம்
லண்டன்:
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் தகுதி சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
ரஜ்கோ மிதிக் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணியினர் செர்பியா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் செர்பியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இங்கிலாந்து அணியின் கோல்களை ஹாரி கேய்ன், நோனி மடுகே, எஸ்ரி கோன்சா, மார்க் குய்ஹி, மார்கஸ் ராஸ்போர்ட் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் நோர்வே அணியினர் 11-1 என்ற கோல் கணக்கில் மால்டோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ஆஸ்திரியா அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் போஸ்னியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

