இந்தியா - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே முதலீடு ஒப்பந்தம்
புது டெல்லி:
இந்தியா - இஸ்ரேல் இடையே முதலீடுகளை ஊக்குவிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமனுக்கும், இஸ்ரேல் நிதித் துறை இணையமைச்சர் பெஸலெல் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து இந்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இரு நாடுகளிடையே முதலீடுகளை ஊக்குவிப்பதோடு, முதலீட்டாளர்களுக்கு நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் மேம்படுத்த இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை தொடர்புடைய துறைகளில் இரு நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

