டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கிண்ண சிலம்பப் போட்டியில் 300 போட்டியாளர்கள் பங்கேற்பு: அன்ட்ரூ டேவிட்
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கிண்ண சிலம்பப் போட்டியில் 300 போட்டியாளர்கள் பங்கேற்பு: அன்ட்ரூ டேவிட்
செராஸ்:
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கிண்ண சிலம்பப் போட்டியில் 300 போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
மஇகா விளையாட்டுப் பிரிவுத் தலைவர் அன்ட்ரூ டேவிட் இதனை தெரிவித்தார்.
மலேசிய சிலம்ப கழகத்துடன் இணைந்து மஇகா விளையாட்டுப் பிரிவு இந்த போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.
இப்போட்டி வரும் செப்டம்பர் 13 முதல் 15ஆம் தேதி வரை கெடா லுனாஸ், ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டியில் நாடு தழுவிய அளவில் 300 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த போட்டி 30 பிரிவுகளாக நடக்கவுள்ளது. அதே வேளையில் 12 குழுக்கள் இதில் கலந்து கொள்ளவர்.
இந்த போட்டிக்கான பதிவு நடந்து முடிந்து விட்டது.
மாணவர்கள் உட்பட இளைஞர்கள் மத்தியில் சிலம்பத்திற்கு அதிக வரவேற்பு இருப்பது இந்த போட்டியில் பதிவு செய்துள்ள போட்டியாளர்களின் எண்ணிக்கை நமக்கு எடுத்து காட்டுகிறது.
நமது பாரம்பரிய கலைகள், தற்காப்பு கலை ஆகியவற்றை வளர்ப்பதற்கும் பாதுகாக்கவும் மஇகா தொடர்ந்து இதுபோன்ற போட்டிகளை நடத்தும் என அன்ட்ரூ டேவிட் தெரிவித்தார்.
இந்த சிலம்ப போட்டியின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா 14ஆம் தேதி நடைப்பெறவுள்ளதும்
மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இப்போட்டியை தொடக்கி வைக்கவுள்ளார்.
செராஸில் நடைபெற்ற இப்போட்டி தொடர்பான செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் அன்ட்ரூ டேவிட் இவ்வாறு தெரிவித்தார்.
மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் அர்விந்த் கிருஷ்ணன், மலேசிய சிலம்ப கழகத்தின் தலைவர் டாக்டர் சுரேஷ், கழக பொருப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

