20 ஆண்டுகள் பழமையான விமானங்களை வாங்கி அனுமதி அளிக்க டிடிசிஏ திட்டம்
புது டெல்லி:
20 ஆண்டுகள் பழமையான விமானங்களை இறக்குமதி செய்ய விமான நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையமான டிஜிசிஏ திட்டமிட்டுள்ளது.
இதற்கு சர்வதேச அளவில் விமானங்களை விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்திய விமானத்துறையில் புதிதாக 1,400க்கும் மேற்பட்ட விமானங்கள் வாங்க முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் விமானங்கள் உருவாக்கி விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதை சமாளிக்க, சில விமான நிறுவனங்கள் குறுகிய காலத்திற்கு விமானங்களை குத்தகைக்கு எடுக்கின்றன. இதில் 18 ஆண்டுகள் பழமையான அழுத்தம் உடைய விமானங்கள் சில நிபந்தனைகளுக்கு இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
இதை, 20 ஆண்டுகளாக நீட்டிக்க டிஜிசிஏ திட்டமிட்டுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

