லிவர்பூல் அணியின் வெற்றிப் பேரணி மீது காரை மோதிய 134 பேருக்கு காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டை ஏற்க மறுப்பு
லிவர்பூல் அணியின் வெற்றிப் பேரணி மீது காரை மோதிய 134 பேருக்கு காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டை ஏற்க மறுப்பு
லிவர்பூல்:
லிவர்பூல் (Liverpool) அணியின் வெற்றிப் பேரணி மீது காரை மோதியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார்.
53 வயது பால் டோய்ல் (Paul Doyle) மீது 31 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் எந்தக் குற்றச்சாட்டையும் ஒப்புக்கொள்ளவில்லை.
இந்த ஆண்டு லிவர்பூல் அணி பிரீமியர் லீக் பட்டத்தை 20ஆவது முறை வென்றது.
அதைக் கொண்டாட மே மாதம் லிவர்பூலில் வெற்றி பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது டோய்ல் காரைக் கூட்டத்தின் மீது மோதியதாக நம்பப்படுகிறது. அதில் 134 பேர் காயமுற்றனர்.
வழக்கு விசாரணை வரும் நவம்பர் மாதம் நடைபெறும்.
ஆதாரம் : AFP
தொடர்புடைய செய்திகள்

