எம்எல்சி பதவியை ராஜினாமா செய்தார் கவிதா
புது டெல்லி:
தனது எம்எல்சி பதவியை பிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா ராஜினாமா செய்தார். அவரை கட்சியில் இருந்து தலைவர் சந்திரசேகர ராவ் சஸ்பெண்ட் செய்திருந்தார்.
இந்நிலையில் கவிதா நேற்று ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிஆர்எஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் மேலவை உறுப்பினர் (எம்எல்சி) பொறுப்பில் இருந்து விலகுகிறேன்.
ஹரீஷ்ராவ், சந்தோஷ் ஒருபுறமும் காங்கிரஸ், பாஜகவினர் மற்றொரு புறமும் வியூகம் வகுத்து என்னை வீழ்த்தி உள்ளனர். இது இத்துடன் நிற்காது.
தந்தையே நீங்களும் அரசியல் துரோகிகளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவ்வாறு கவிதா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

