இமயமலையில் 400க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் பெரிதாகின்றன
புது டெல்லி:
இமயமலையில் 400க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் தண்ணீர் நிரம்பி பெரிதாகி வருவதாகவும், இதனால் கீழ் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு அபாயம் இருப்பதாகவும் இந்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர், இமாசலம் ஆகியவற்றில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில், லடாக், ஜம்மு - காஷ்மீர், இமாசல பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம், அருணாசல பிரதேசத்தில் 432 பனிப்பாறை ஏரிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பெரும் சேதம் ஏற்படுத்தும் என கருதி இந்திய அரசு அவற்றை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது
2011ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பனிப்பாறை ஏரிகளின் நிலப்பரப்பு 1,917 ஹெக்டேரிலிருந்து 2,508 ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இது 30.83 சதவீத உயர்வாகும் என அரசு தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

