மணிப்பூருக்கு செல்கிறார் பிரதமர் மோடி
புது டெல்லி:
மணிப்பூரில் ஏற்பட்ட இனக் கலவரத்துக்கு பிறகு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 13ம் தேதி அந்த மாநிலத்துக்கு வரும் 13-ம் தேதி செல்கிறார். இதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இனக் கலவரத்தால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்லவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் உயர் அதிகாரிகள் கூறுகையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள பைரபி-சாய்ராங் ரயில் பாதையை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி முதலில் மிசோரம் செல்ல உள்ளார்.
அங்கிருந்து மணிப்பூருக்கு வந்து நலத் திட்டங்களை தொங்கி வைக்கிறார். அவரது பயண திட்டம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

