சீனாவிடம் மோடி அடிபணிந்தார்: காங்கிரஸ் விமர்சனம்
புது டெல்லி:
அடாவடி நடவடிக்கைக்கு பெயர்போன சீனாவிடம் பிரதமர் மோடி அரசு அடிபணிந்துவிட்டது என்று மோடியின் சீனப் பயணத்தை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
அக் கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், 2020ம் ஆண்டு கல்வான் மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிர் தியாகம் செய்தனர். தற்போது அடாவடி நாடான சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் சீனா எல்லையில் எந்தத் தவறும் செய்யவில்லை என்று பிரதமர் மோடி ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது.
லடாக் எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்பு முன்பு இருந்த நிலையை தொடர வேண்டும் என்ற பிரதமர் மோடியால் சீன அதிபரிடம் வலுயுறுத்த முடிவில்லை.
ஆபரேஷன் சிந்தூரின்போது சீன தளவாடங்களைத்தான் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தியது. பிரம்மபுத்ராவில் பிரம்மாண்ட அணை கட்ட சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றார் அவர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

