இசாக்கை வாங்குவதில் லிவர்பூல் கிளப்பினர் சாதனையை முறியடித்ததுள்ளனர்
இசாக்கை வாங்குவதில் லிவர்பூல் கிளப்பினர் சாதனையை முறியடித்ததுள்ளனர்
லண்டன்:
இசாக்கை வாங்குவதில் லிவர்பூல் கிளப்பினர் சாதனையை முறியடித்ததுள்ளனர்.
நியூகாஸ்டல் வீரர் அலெக்சாண்டர் இசாக்கை லிவர்பூல் சுமார் 130 மில்லியன் பவுண்டுகள சாதனை கட்டணத்திற்கு ஒப்பந்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.
இங்கிலாந்து பிரிமியர் லீக் சாம்பினுடனான ஆறு வருட ஒப்பந்தத்தை முடிப்பதற்கு முன்பு இசாக் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
25 வயதான இசாக் கடந்த சீசனில் நியூகாஸ்டல் அணிக்காக 23 லீக் கோல்களை அடித்தார்.
அவர் கோள்கள் எண்ணிக்கையில் லிவர்பூல் நட்சத்திரம் முகமது சாலாவிடம் பின்தங்கியுள்ளார்.
இருந்தாலும் நியூகாஸ்டல் அணி சாம்பியன் லீக்கிற்கு தகுதி பெற அவர் உதவினார்.
இந்நிலையில் லிவர்பூலுக்கு செல்ல அவர் விருப்பம் தெரிவித்த பிறகு,
நியூகாஸ்டல் முதல் அணியில் இருந்து இசக் தனித்தனியாக பயிற்சி பெற்றதால், சீசன் முழுவதும் இடமாற்ற ஊகங்கள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

