தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் 38 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு
தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் 38 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்வு
சென்னை:
தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் 1,44,634 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலையில் 892 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 6,606 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 82 சுங்கச்சாவடிகளும், மாநில நெடுஞ்சாலைகளில் 7 சுங்கச்சாவடிகளும் உள்ளன.
இதில் 78 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் இரண்டு கட்டங்களாக சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது.
அதில் ஏப்ரல் மாதம் 40 சுங்கச்சாவடிகளில் ரூ.25 வரை சுங்கக்கட்டண உயர்த்தப்பட்டது. செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச் சாவடிகளுக்கும் ஆண்டு தோறும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதித்துள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் தற்போது 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

