தெலங்கானாவுக்கு ரூ.50 லட்சம் வெள்ள நிவாரண நிதி: நடிகர் பாலகிருஷ்ணா அறிவிப்பு
ஹைதராபாத்:
தெலங்கானாவுக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் வழங்குவதாக நடிகர் பாலகிருஷ்ணா அறிவித்தார்.
தெலுங்கு திரையுலகத்தில் 50 ஆண்டுகள் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருபவர் பாலகிருஷ்ணா. இதற்காக அவர் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.
இதற்கான விருது வழங்கும் விழா மற்றும் பாராட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது.
அப்போது நடிகர் பாலகிருஷ்ணா பேசுகையில், தெலங்கானாவில் பெய்த மழையால் பலர் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். அவர்களின் கண்ணீரை யாராலும் துடைக்க முடியாது. மழைவெள்ளம் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளும் உள்ளூர் மக்களும் நிறைய பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிந்து கவலை கொள்கிறேன்.
எனவே வெள்ள நிவாரண நிதியாக ரூ.50 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

