images

சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி அபாரம்

image

சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி அபாரம்

ரியாத்:

சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.

கிங் அப்துல்லா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் டவுன் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் அல் டவுன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் நசர் அணிக்காக ஜோய் பெலிகஸ் ஹாட்ரிக் கோல்களை அடித்தனர்.

மற்ற கோல்களை கிறிஸ்டியானோ ரொனால்டோ, கிங்லே கோமன் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் அல் ஹிலால் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் அல் ரியாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் கலிஜ் அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் அல் சபாப் அணியை விழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

பகிர்
+ - reset