மஇகா தேசிய இளைஞர் பிரிவு ஏற்பாட்டில் பெனால்டி கிக் போட்டி: வெற்றியாளர்களுக்கு 16,000 ரிங்கிட் ரொக்கப் பரிசு
மஇகா தேசிய இளைஞர் பிரிவு ஏற்பாட்டில் பெனால்டி கிக் போட்டி: வெற்றியாளர்களுக்கு 16,000 ரிங்கிட் ரொக்கப் பரிசு
கோலாலம்பூர்:
மஇகா தேசிய இளைஞர் பிரிவு ஏற்பாட்டில் வரும் செப்டம்பர் 6ஆம் Sri Gombak KSL Sports Futsal அரங்கில் பெனால்டி கிக் போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் பங்கேற்கும் குழுக்கள் 250 ரிங்கிட் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஒரு குழுவில் ஐந்து ஆட்டக்காரர் இடம் பெற்றிருக்க வேண்டும். ஒரு பிரிவில் நான்கு குழுக்கள் விளையாடும்.
இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் செல்லும் குழுவுக்கு 10,000 ரிங்கிட் ரொக்கம், பரிசுகள் வழங்கப்படும்.
இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் குழுவுக்கு 3,000 ரிங்கிட், 3,4ஆவது இடங்களை பிடிக்கும் குழுக்களுக்கு தலா 1,000 வெள்ளியும் வழங்கப்படும்.
ஐந்து முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் குழுக்களுக்கு தலா 250 ரிங்கிட் வழங்கப்படும்.
ஆக மொத்தம் 16,000 ரிங்கிட் ரொக்கப் பரிசாக காத்துக் கொண்டிருக்கிறது.
போட்டியில் பங்கேற்க விரும்பும் குழுக்கள் 016-6448635 அல்லது 010-2668981 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

