சாம்பியன் லீக் சுற்றில் பாயர்ன் முனிச், பார்சிலோனா அணிகளை பிஎஸ்ஜி சந்திக்கிறது
சாம்பியன் லீக் சுற்றில் பாயர்ன் முனிச், பார்சிலோனா அணிகளை பிஎஸ்ஜி சந்திக்கிறது
மொனாக்கோ:
ஐரோப்பிய சாம்பியன் லீக் சுற்றில் பாயர்ன் முனிச், பார்சிலோனா அணிகளை பிஎஸ்ஜி சந்திக்கிறது.
ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டிக்கான குலுக்கல் நேற்று மொனாக்கோவில் நடைபெற்றது.
இதில் சாம்பியன் லீக் நடப்பு சாம்பியனான பிஎஸ்ஜி இந்த சீசனில் பாயர்ன் முனிச், பார்சிலோனா அணிகளுடன் ஒரே பிரிவில் உள்ளது,
அதே நேரத்தில் 15 முறை சாம்பியன்களான ரியல்மாட்ரிட் மீண்டும் மென்செஸ்டர் சிட்டி, லிவர்பூலை எதிர்கொள்ளவுள்ளது.
மேலும் பிஎஸ்ஜி இரண்டு பிரிமியர் லீக் அணிகளான டோட்டன்ஹாம், நியூகாஸ்டல் யுனைடெட், அத்துடன் அட்லாண்டா, பெயர் லெவர்குசென் ஆகிய அணிகளை எதிர்கொள்ளும்.
கடந்த சீசனில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய லீக் வடிவத்தில் ஒவ்வொரு கிளப்பும் எட்டு போட்டிகளில் விளையாடுகின்றன.
நான்கு சொந்த மண்ணிலும் நான்கு வெளியூர் மைதானத்திலும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்

