உத்தரகண்டில் 300 போலி சாமியார்கள் கைது
புது டெல்லி:
உத்தரகண்ட் மாநிலத்தில் 300 போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டனர்.
சனாதன தா்மத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் போலி சாமியாா்களுக்கு எதிராக, ஆபரேஷன் காலநேமி என்ற தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்த நடவடிக்கையின்கீழ், வங்கதேச நாட்டைச் சோ்ந்த ஒருவா் உள்பட 300-க்கும் மேற்பட்ட போலி சாமியாா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
முதல்வா் புஷ்கா் சிங் தாமி உத்தரவின் பேரில் கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆபரேஷன் காலநேமியின்போது 4,000-க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபா்கள் கண்டறியப்பட்டனா். அவா்களில் 300-க்கும் மேற்பட்ட போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
அதில், ஹரித்வாரில் 162 போலி சாமியார்கள், டேராடூனில் 113, உத்தம் சிங் நகரில் 17 போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

