2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்கிறது இந்தியா
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்கிறது இந்தியா
புதுடெல்லி:
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏல விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான விளையாட்டு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "2030-ம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடத்துதற்கான ஏல விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான விளையாட்டு அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஏல விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகள், அதிகாரிகளிடமிருந்து தேவையான நடைமுறைகளுடன் போட்டிகளை நடத்த குஜராத் மாநில அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும், குஜராத் அரசுக்குத் தேவையான மானிய உதவிகளை வழங்கவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 72 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள். விளையாட்டுப் போட்டிகளின் போது ஏராளமான விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் இந்தியாவிற்கு வருவார்கள் என்பதால் உள்ளூர் வணிகங்கள் பயனடைந்து அதிக வருவாய் ஈட்டப்படும்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்

