16 வயதில் சாதனை படைத்த லிவர்பூல் வீரர்
16 வயதில் சாதனை படைத்த லிவர்பூல் வீரர்
லண்டன்:
லிவர்பூல் கால்பந்து அணி வீரர் 16 வயதிலேயே கோல் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து பிரிமியர் லீக்கில் குறைந்த வயதில் கோல் அடித்தவர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெறும் பிரிமியர் லீக்கில் நேற்று லிவர்பூல் அணியும் நியூகாஸ்டல் அணியும் மோதின.
இதில் 96ஆவது நிமிடத்தில் மாற்றுவீரராக வந்த 16 வயதேயான லிவர்பூல் வீரர் ரியோ குமோகா 100ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து அசத்தினார்.
இதன்மூலம் லிவர்பூல் அணி 3-2 என வென்றது.
மேலும் ரியோ குமோகாவுக்கு 16 ஆண்டுகள் 361 நாட்கள் ஆகின்றன.
இங்கிலாந்து பிரிமியர் லீக் வரலாற்றில் 4ஆவது இளம் வீரராகவும் லிவர்பூல் அணியில் முதல் வீரராகவும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

